'லேட்' ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - தொடக்கக் கல்வி இயக்குனர்
சில நாட்களுக்கு முன், அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுடன், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் உரையாடிய, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர், காலையில் ஏதேனும் ஒரு பள்ளியில் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்;பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர் மீது, '17 ஏ' சட்டத்தின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை நேர பிரார்த்தனை கூட்டங்களில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பங்கேற்றால் மட்டுமே, தாமதமாக வரும் ஆசிரியர்களை அடையாளம் காண முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment