Saturday, April 15, 2017

அம்மா கல்வியகம்: 2 லட்சம் பேர் பயன்

அ.தி.மு.க., - பன்னீர் அணி சார்பில் துவக்கப்பட்ட, அம்மா கல்வியகத்தில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் பெயரை பதிவு செய்து, பயன்பெற்றுள்ளனர்.


தமிழக மாணவ, மாணவியருக்கு, இலவச கல்வி சேவை வழங்குவதற்காக, பன்னீர் அணியை சேர்ந்த, அஸ்பயர் சுவாமிநாதன், 'அம்மா கல்வியகம்' என்ற, இணையதளத்தை உருவாக்கினார்.இந்த இணையதள கல்விச் சேவையை, மார்ச், 1ல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். அதன் இணையதள முகவரி, www.ammakalviyagam.in. இந்த இணையதளத்தில், மேல்நிலைக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, இலவச பாடப்பயிற்சி, நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி, வேலை வாய்ப்பு பயிற்சி போன்றவை வழங்கப்படுகிறது.

இதுவரை, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், அம்மா கல்வியகத்தில் இணைந்துள்ளனர். இந்த இணையதளத்தில், பிரபல ஆசிரியர்கள் மூலமாக, பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன

No comments:

Post a Comment