Tuesday, April 25, 2017


பள்ளிக்கல்வி துறை இயக்குனராக பொறுப்பு ஏற்கும் திரு.இளங்கோவன் அவர்களுக்கு காத்திருக்கும் சவால்கள்

பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக, இளங்கோவன் இன்று பொறுப்பு ஏற்கிறார். பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் ஆக்கப்பூர்வமான வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், இளங்கோவன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்துறையில், பல சவால்கள் காத்திருக்கின்றன.அதன் விபரம்:
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் உட்பட, ஆசிரியர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும்

* பல ஆசிரியர்கள், வகுப்பில் பெயருக்கு பாடம் நடத்திவிட்டு, தாங்கள் நடத்தும் அல்லது பணியாற்றும், 'டியூஷன்' மையத்துக்கு மாணவர்களை வரவழைக்கும் நிலையை மாற்ற வேண்டும்

* தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்ய வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள், மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்

* குறுநில மன்னர்கள் போல் செயல்படும், முதன்மை கல்வி அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும்

* பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்

* அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதுடன், ஆசிரியர்களுக்கு, செயல்திறன் அறிதல் திட்டம் கொண்டு வர வேண்டும்

* வகுப்புகளுக்கு வராமல், 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்

* புதிய பாடத்திட்டம் தயாரிக்கவும், வெளி மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படும் கற்பித்தல் முறைகளை, தமிழகத்தில் அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment