ஆதார் அட்டையின் ரகசிய விவரங்கள் திருட்டு.. 8 இணையதள நிறுவனங்கள் மீது எப்ஐஆர்: டெல்லி போலீசார் அதிரடி
டெல்லி: ஆதார் அட்டை விவரங்களை திருடிய இணையதளங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை ஆணையம் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆதார் அட்டைக்காக பெறப்படும் விவரங்கள் தனிப்பட்டவை. அந்த விவரங்களை குறிப்பிட்ட நபரின் அனுமதி இல்லாமல் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. செல்போன் இணைப்பு பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆதார் அட்டை விவரங்கள் பெறப்படுகிறது. அப்படி பெற்ற பின்னர் அவை வேறு சில தவறான காரியத்திற்கு பயன்படுத்துவது குற்றமாக கருதப்படும்.
இந்நிலையில்,
8 இணைய தள நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் ஆதார் அட்டை விவரங்களை திருடியதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நிறுவனங்கள் மீது டெல்லி தேசிய அடையாள அட்டை ஆணையம் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆதார் அட்டை விவரங்கள் மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், இது போன்று புகார் எழுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
No comments:
Post a Comment