Wednesday, May 10, 2017

பயிற்றாசிரியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

திருவள்ளூர் மாவட்டத்தில், சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள நிறுவனத்தில் தொழிற்பிரிவு பயிற்றாசிரியர் காலிப் பணியிடங்களுக்கு மே 10-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவு பயிற்றாசிரியர் பணியிடங்கள், சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் கல்வி பயின்ற, பயிலும் மாணவ, மாணவிகளைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது.

இதற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் தகுதியானவர்கள் அதற்கான படிவத்தினை மாவட்ட இணையதள முகவரி அல்லது www.socialdefence.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், கல்வி மற்றும் இதர சான்றிதழ்களின் ஒளிநகல்களுடன் மே 10-க்குள் கீழ்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

கூடுதல் விபரம் பெற அலுவலக வேலை நாள்களில் சமூக நல பாதுகாப்புத் துறை,  இயக்குநர் அலுவலகம், எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், அபிராமி தியேட்டர் அருகில், சென்னை-600 010 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 044- 26426421, 26427022 விரிவு எண். 120 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம்.  இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment